டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தகவல்களைத்  திரட்டும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம்!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்த தகவல்களை மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சேகரிக்க

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:20 pm

எம். அருண்குமார்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்த தகவல்களை மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சேகரிக்க துவங்கியுள்ளது.    இதற்காக எம்எஸ்எம்இ டேட்டா பேங்க் (MSME Data Bank) என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய முழுவதிலும் இயங்கி வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்கள் குறித்த தகவல்களை அதில் பதிவு செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை தொழில்முனைவோர் சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த இணைய தளத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சங்கங்களும் தங்கள் சங்கம் குறித்த தகவல்களைப் பதிவு செய்யலாம்.  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதனுடைய விண்ணப்பதாரரின் ஆதார் எண், அந்த நிறுவனத்தை பதிவு செய்ததற்கான உத்யோக் ஆதார் எண், பான் அட்டை (நிரந்தர  கணக்கு எண்) எண், உற்பத்தி நிறுவனமா, சேவை நிறுவனமா, முகவரி, அந்நிறுவனத்தின் சார்பாக தொடர்பு கொள்ள வேண்டிய நபர் பெயர், நிறுவனம் துவங்கிய தேதி, முகவரி, கைப்பேசி எண், இ-மெயில் முகவரி, இணையதள முகவரி, தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா? எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள்? உற்பத்தி கொள்ளளவு, பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு,  உற்பத்தி செய்யப்பட்ட பொருளை வாங்கும் நபர்கள், நிறுவனங்கள், உற்பத்தி செய்யப்படும் பொருளின் பெயர், விவரம், வங்கி கணக்கு எண், வங்கியின் ஐஎப்எஸ்சி எண்,   தொழில்முனைவோர் சங்கத்தில் உறுப்பினரா? வங்கி அல்லது அரசுகளின் நிதி மற்றும் மானிய உதவி பெறப்பட்டுள்ளதா? போன்ற பல்வேறு தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பதிவு செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட இ-மெயில் முகவரிக்கு அந்த இணைய தளத்திற்குள் நுழைவதற்கான பயனர்பெயர், ரகசிய குறியீடு மற்றும் அந்த தகவல்களை சரி பார்ப்பதற்கான லிங் இணையதளம் பற்றிய தகவல் அனுப்பி வைக்கப்படும்.

அதன் பிறகு அந்த பயனர்பெயர் மற்றும் ரகசிய குறியீட்டைப் பயன்படுத்தி அந்த இணையதளத்திற்குள் நுழைந்து கூடுதல் தகவல்களைப் பதிவு செய்யலாம்.  பதிவு செய்யப்பட்ட தகவல்களை மாற்றி அமைக்கலாம்.  மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும்,  திட்டமிடுவதற்காகவும் இந்த தகவல்களைப் பயன்படுத்தும்.

தகவல்களை பதிவு செய்வதற்கான இணையதள முகவரி : http:www.msmedatabank.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.